விரைவில் இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

240 0

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என நியுஸ் இன் ஏசியா தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார், இலங்கை வரவுசெலவுதிட்ட செயற்பாடுகளில் கவனம் செலுத்த ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெறவேண்டும் என இந்தியா கருதுகின்றது என நியுஸ்இன் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த விஜயம் நவம்பர் பிற்பகுதியிலும் இடம்பெறலாம் என நியுஸ்இன் ஏசியா தெரிவித்துள்ளது.

சீனாவுடனான எல்லை தகராறு -அந்த நாட்டுடனான வர்த்தக மோதல் காரணமாக -பூகோள மூலோபாய சூழ்நிலை வேகமாக மாற்றமடைவதன் காரணமாக இந்திய வெளிவிவாகர அமைச்சரின் விஜயத்தினை எதிர்பார்க்கலாம் என நியுஸ் இன் ஏசியா தெரிவித்துள்ளது.