ஸ்ரீலங்கா இன்சூரன்சின் யூனியன் பிளேஸ் அலுவலகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மறு அறிவித்தல் வரை குறித்த அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 10பேரில் 8பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

