சிறிலங்கா ஊடக அமைச்சில் நால்வருக்கு கொரோனா!

366 0

சிறிலங்கா ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பொரளை பொலிஸ் நிலையத்தின் 6 உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று காலை வரையான காலப்பகுதியில் மொத்தம் 10,424 கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 6123 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 4282 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

குறித்த கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 20பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.