வத்தள பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வத்தள சுகாதார வைத்திய வலயத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் வருண அபேசேகர இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, “குறித்த நிறுவனத்தில் 1000 மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர்.
இதில் 120பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் முடிவில், 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கைத்தொழிற்சாலை, தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையில் வத்தள பகுதியை சேர்ந்த 75 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

