மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் துப்பாக்கி, வாள் மீட்பு

114 0

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர்தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை (30) மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை (30) காலையில் மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில பொலிஸ் சாஜன் அஜித், சுதிமில்சன், பண்டார, சந்தன, விஜயசிங்க ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியை சுற்றி சோதனையிட்டனர்.

இதன்போது அங்கு பற்றை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாகி ஒன்று வாள் ஒன்றையும் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் இதுதொடர்பான விசாரணை மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றவியல் பிரிவுபொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.