மினுவங்கொட பிரான்டிக்ஸ் கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு உருவானது என்பது குறித்து விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக உதவி பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை மினுவாங்கொடவில் உள்ள பிரான்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையில் எவ்வாறு வைரஸ் தொற்று பரவியது என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைக்ள இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

