அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் பாத்திரங்களை வகிக்கின்றது!

251 0

சீன – இலங்கை நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் மும்முரமாக இருப்பதாக தெரிவித்துள்ள சீனா, இலங்கையுடனான இராஜதந்திர அணுகு முறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் பாத்திரங்களை வகிப்பதாக உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சீன தூதரகம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலரின் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் சீனா குறித்த அறிவிப்பிற்கு பதிலளிக்கும் வகையில் சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டில் உரையாற்றிய பொம்பியோ, சீனா ஒரு சூரையாடும் ; நாடு என்றும், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறுவதாகவும் தெரிவித்திருந்த நிலையிலேயே ; சீனா ;தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.