வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை பொதி மூலமாக வழங்க அரசாங்கம் தீர்மானம் -பஷில்

304 0

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்குப் பொருட்களைப் பொதி மூலமாக விநியோகிக்க அரசாங் கம் கவனம் செலுத்தியுள்ளதாக என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களு க்கு இரண்டு வாரங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகை யில் உலர் உணவுப் பொருட்களை பொதி மூலமாக வழங்கு தொடர்பாகப் பொரு ளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கவனம் செலுத்துகிறது.

கடன் தவணைகளுக்குச் சலுகை காலம் வழங்குவது தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம் பெற்றது இதன்போது ஒரு வார காலம் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் வழங்கத் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

 

கொவிட்- 19 வைரஸ் மீண்டும் தோன்றியுள்ள இந்த நேரத் தில், அத்தியாவசிய சேவைகளை கடந்த காலங்களைப் போலவே திறமையாகவும், சரியான முறையில், தொடர்ச் சியாக பராமரிக்க வேண்டும் என பஷில் தெரிவித் துள்ளார்.

நாட்டில் தற்போது சூழ்நிலையில் மின்சாரம், நீர் விநியோ கம், எரிபொருள், எரிவாயு, போக்குவரத்து, சுகாதாரம், அதி வேக வீதியில் வசிக்கும் மக்கள் உட்பட அனைத்து மக் களுக்கும் அத்தியாவசிய சேவைகளை சரியான முறை யில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முதியவர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் எடுக்குமாறும், பொதுமக்களின் உதவி தொகை மற்றும் ஓய்வூதியங்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க அரசாங்க முகவர்கள் மற்றும் தபால் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.