20வது திருத்தம் தொடர்பில் பிரதமருடன் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?

195 0

20வது திருத்தம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெளியிடவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுத்தேர்தலின் போது 20வது திருத்தததை முஸ்லீம் காங்கிரஸ் எதிர்த்ததுடன் கட்சியின் கொள்கைகள் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தது என ஐக்கியதேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.


எனினும் மூடப்பட்ட கதவுகளின் பின்னால் இந்த அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கைக்கு வந்துள்ளனர் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

19வது திருத்தம் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக விழுமியங்களை 20வது திருத்தத்தை ஆதரித்ததன் மூலம் முஸ்லீம் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது என ஐக்கியதேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.


முஸ்லீம் மக்கள் மீண்டுமொரு அவர்கள் தெரிவு செய்தவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர், பிரதமருடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து உண்மையை முஸ்லீம்காங்கிரஸ் வெளியிடாமலிருப்பது பொறுப்பற்ற ஒழுக்கமற்ற செயல் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அவர்களின் மௌனம் அவர்கள் முஸ்லீம் மக்களின் நலனிற்கு பாதகமான உடன்படிக்கையை செய்துள்ளனர் என்பதை புலப்படுத்துகின்றது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.