அரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை – காரில் வந்த 2 பேர் வெறிச்செயல்

69 0

அரியானாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கல்லூரி மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரியானாவின் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லப்கர் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த 21 வயது மாணவி ஒருவர், நேற்று தேர்வு எழுதிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தார். அப்போது ஒரு காரில் வந்த 2 பேர் அந்த மாணவியை காருக்குள் இழுத்து போட்டு கடத்த முயன்றனர். இதனால் சுதாரித்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அந்த மாணவி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள், மாணவிக்கு தெரிந்தவர்கள் என கருதப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.