தியதலாவ மீன் சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச சபையின் தலைவர் கந்தசாமி கண்ணா தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற தியதலாவை மீன் வர்த்தகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீன் சந்தையுடன் அமைந்துள்ள கடைத் தொகுதியொன்றை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மக்களின் நலன் கருதி பண்டாரவளையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் சந்தையின் செயற்பாடுகளை மீள் அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பண்டாரவளை மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

