அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்க உத்தரவு

286 0

அரந்தலாவ பிக்குகள் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறுசட்டமா அதிபர் தப்புல டி லிவேரா  பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


இது குறித்து சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசார ஜயரத்னவால் இன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்குமாறும் இரு வாரங்களுக்குள் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

1987 ஜூன் 2ஆம் திகதி விடுதலைப்புலிகளால் 34 பௌத்த பிக்குகள் அரந்தலாவ பிரதேசத்தில் கொல்லப்பட்டதாகவும் அத்தாக்குதலிலிருந்து 12 பிக்குகள் தப்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.