திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:
* திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும்.
* நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது. அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
* தயாரிப்பாளர், இயக்குநர், வினியோகஸ்தர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.

