ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பட்டல்கல பகுதியில் வேன் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டனிலிருந்து புலியாவத்தை பகுதிக்கு சென்ற வேன் (22) இரவு 07.30 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் காசல்ரி நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேனின் சாரதி மற்றும் வேனில் பயணித்த ஒருவருமாக இருவர் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை ஹட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

