காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே இதன்படி நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதன்படி குறித்த கால பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்கள், திகதி அடிப்படையில் மேலும் 3 மாத காலங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

