பேலியகொட மத்திய மீன் சந்தை மூடப்பட்டது

347 0

பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் 49 பேர்   கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மீன் சந்தை உடனடியாக மூடப்பட்டது.

பேலியகொட மொத்த மீன் சந்தையில் பணிபுரியும் 49 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக களனி சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் பேலியகொட மொத்த மீன் சந்தை வளாகமானது அனைவரும் கூடும் இடம் என்பதால் தொற்றுநோயியல் பிரிவால் விடுக்கப்பட்ட அறிவித்தல்படி நேற்று முன்தினம் அதாவது 19 ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த பகுதியில் பல பிரிவுகளில் பணியாற்றும் சுமார் 100 பேரை தேர்ந் தெடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி, கொரோனா தொற்றாளர்கள் 49 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனையடுத்தே மீன் சந்தை உடனடியாக மூடப்பட்டது.