ரியாஜ் பதியூதீனின் ரீட் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

361 0

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தற்காலை தாக்குதல்கள் தொடர்பில் தன்னை மீளவும் கைதுசெய்ய மிகத் தீவிரமாக முயற்சிகள் இடம்பெறும் நிலையில், கைதுசெய்வதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி ரியாஜ் பதியூதீன் கடந்த 13 ஆம் திகதி இந்த மனுவினை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில்   ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு அதன்பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.