பன்னல பிரதேச கிராமமொன்று முடக்கம்

333 0

பன்னல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட எலபடகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஆனந்த ​ரணவிரு மாவத்தை முடக்கப்பட்டுள்ளதென, பன்னல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசத்திலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த, 100 பேருக்கு நாளைய தினம் (21) பிசிஆர் பரிசோத​னைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 98 பேருக்கு 15ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது, பெண்ணொருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, இந்தப் பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பெண் உள்ளடங்கலாக இதுவரை இந்த பிரதேசத்தில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.