பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் மற்றும் பொலித்தீன் உற்பத்திகள் சிலவற்றுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து தடைவிதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி அப்புறப்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் நோக்கில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய பிளாஸ்டிக் மூலப்பொருள்களுக்குள் இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் கிருமிநாசினி பதார்த்தங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

