எடப்பாடி பழனிசாமி பெயரை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்

300 0

முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை மகிழ்ச்சியோடு அறிவித்து உள்ளேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2021 சட்டசபை தேர்தல் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

கேள்வி:- முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- எடப்பாடி பழனிசாமி பெயரை நான் மகிழ்ச்சியோடு அறிவித்து உள்ளேன்.

கேள்வி:- உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது.

கேள்வி:- அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவுக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன?

பதில்:- என்ன அதிகாரம் என்பது அ.தி.மு.க. சட்ட விதிகளில் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.