கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவது குறித்த இறுதி முடிவு இன்று பிற்பகல் 02:00 மணிக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைகளை நடாத்துவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று அறிவித்திருந்தார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 11 ஆம் திகதி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டது.
எனினும் குறித்த இரு நாட்களிலும் பரீட்சையை நாட்டதுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டு பிற்பகல் 02:00 மணிக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

