ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளுக்கான மாற்று திகதிகளை வழங்க நீதிச் சேவை ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
அத்தோடு வழக்குகளுக்கான மாற்று திகதிகளை நீதிமன்ற அறிவித்தல் பலகையில் பிரசுரிக்குமாறும் நீதிச் சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

