உத்தரபிரதேச மாநில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் பிரச்சினை செய்யக்கூடாது: எல் முருகன்

310 0

உத்தரபிரதேச மாநில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் பிரச்சினை செய்யக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன், டெல்லியில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். பின்னர் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் நடந்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்-மந்திரி உடனடியாக நடவடிக்கை எடுத்தார். தற்போது வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தவறு யார் செய்திருந்தாலும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பா.ஜ.க. கூறியுள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த ஒரு சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு பாதிக்கின்ற பிரச்சினையை உருவாக்கும் வகையில் செயல்படக்கூடாது. அ.தி.மு.க. கூட்டணி கட்சியாக உள்ளதால் அதன் உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.