சிறிலங்காவில் மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக அதிகரிப்பு

213 0

சிறிலங்காவில் வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 04 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்று உறுதியானவர்களில் 129 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 42 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.