காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை சர்வதேசம் தேடித்தர வேண்டும்- மனுவல் உதயச்சந்திரா

371 0

இலங்கை அரசாங்கமும் சரி, சர்வதேசமும் சரி எமது போராட்டங்களை ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் இல்லை. எங்களையும் அவர்கள் திரும்பி பார்க்கின்றார்கள் இல்லை. எனவே சர்வதேசம் எமது கோரிக்கைகளை ஏற்று காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடித்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

சர்வதேச சிறுவர் தினம் நேற்றைய தினம் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.அனைத்து சிறுவர்களும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் தாய் தந்தை உறவுகளுடன் உறவாடி மகிழ்வுடன் இருப்பவர்களே சிறுவர்கள்.

சுர்வதேச சிறுவர் தினத்தை எல்லா இடங்களிலும் கொண்டாடி வருகின்றனர்.ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறுவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர்.

ஓமந்தை ஊடாக பெற்றோருடன் வந்த சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.தாய் தந்தை பிள்ளைகள் அணைவரும் ஒன்றாகவே இராணுவத்திடம் சரணடைந்தனர்.

ஆனால் பிள்ளைகளும் இல்லை.பெற்றோர்களும் இல்லை.
யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.கடந்த 11 வருடங்களாக காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் நிலையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடி மகிழும் நிலையில் நாங்கள் இல்லை.அதனால் சிறுவர் தினத்தை துக்க தினமாக நாங்கள் அனுஸ்ரித்து வருகின்றோம்.

-காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிப்பீர்கள் என்றால் நாங்கள் எந்த வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நாங்கள் தேடி வருகின்றோம்.அந்த உறவுகள் எமக்கு தேவை.வீதிகளில் நாங்கள் போராடுகின்றோம்.

இலங்கை அரசாங்கமும் சரி,சர்வதேசமும் சரி எமது போராட்டங்களை ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் இல்லை.எங்களையும் அவர்கள் திரும்பி பார்க்கின்றார்கள் இல்லை.

-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒரு தடவை திரும்பி பாரூங்கள்.எனவே சர்வதேசம் எமது கோரிக்கைகளை ஏற்று காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடித்தர வேண்டும் என கேட்டு நிற்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.