ஹட்டனில் கோர விபத்து – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு!

195 0

ஹட்டன் – டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட4பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகிழாக கவிழ்ந்துள்ளதாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது 24 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பயணிகள் குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யபட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.