இரண்டு வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது

200 0

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குகள் இரண்டை விற்பனை செய்ய முயற்சித்த நால்வர் நேற்று இரவு இமதுவ- போதாகொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட படையின் களுத்துறை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்குகள் இரண்டும், டைடன் வகையைச் சேர்ந்ததென தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.