அரசாங்கம் சர்வதேச கடப்பாட்டினை எவ்வாறு நிறைவேற்றவுள்ளது?

230 0

இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கும் சமீபத்திய தேர்தல்களில் அரசாங்கம்   வெற்றி மற்றும் அதற்கு மூன்றில் இரண்டு கிடைத்தமைக்கும் இடையில் பொருந்தாதன்மை உள்ளதாக கருதவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

இரண்டும் பொருந்ததன்மை கொண்டவை என நாங்கள்கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் தனக்கு வலுவான மக்கள் ஆணையுள்ளதாகவும் மூன்றில்இரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும்தெரிவிக்கின்றது அரசாங்கம் இந்த நியாய பூர்வ தன்மையை நல்லிணக்க நடைமுறைகளுக்கும் தனது சர்வதேச கடப்பாட்டினை நிறைவேற்றுவதற்கும் எவ்வாறு பயன்படுத்தவுள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளோம் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் இன்னமும் நடைமுறையில் உள்ளது என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இலங்கை இணை அனுசரணையிலிருந்து விலகியுள்ள போதிலும் மார்ச்சில் மனித உரிமை பேரவை தீர்மானம் குறித்து ஆராயும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை பேரவைதீர்மானம் குறித்த முக்கிய விவகாரம் நல்லிணக்கம் என தெரிவித்துள்ள டெனிசபி இந்ததீர்மானம் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையுடன் சர்வதேசசமூகம் ஈடுபாட்டை காட்டுவது குறித்த அளவுகோலாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம்; இதில் உறுதியாகவுள்ளது

நீங்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தமுக்கிய அமைப்பு என நீங்கள் தெரிவிக்கின்றீர்கள்என குறிப்பிட்டுள்ள தூதுவர் இந்த தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகளில் ஒன்று ஜேர்மனி, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு என தெரிவி;;த்துள்ளதுடன் ஏனைய நாடுகள் கனடா மொன்டிநீக்ரோ பிரிட்டன் அல்பேனியா என தெரிவித்துள்ளார்.

ஆகவே பிரதானஅனுசரனை வழங்கிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நாடும் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலும் 27 நாடுகளும் உள்ளன நாங்கள் ஜெனீவா தீர்மானம் குறித்து உறுதியாக உள்ளோம் நாங்கள் தீர்மானம் குறித்த விடயங்களில் கலந்துகொள்கின்றோம் ஆனால் நாங்கள் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுதவற்கான முக்கியமான நடவடிக்கைகளைமுன்னெடுத்தோம் என தெரிவிப்பது தவறு எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் என்ன யோசனையை முன்வைக்கின்றது என்பதை பொறுத்தே இந்த முடிவின் தாக்கம் அமையும்எனவும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐநா மற்றும் சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் தொடர்ந்தும் எவ்வாறான தொடர்பாடல்களை பேண போகின்றது என்பதை அரசாங்கத்திடமிருந்து அறிய ஆவலாகஉள்ளோம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.