வீடு புகுந்து 3 கோடி ரூபாய் கொள்ளை

251 0

கட்டான – அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றில் வந்த 5 பேர் அடங்கிய கும்பலினால் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.