20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்

388 0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சில விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமாகவுள்ளன.

அதனடிப்படையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளதுடன், குறித்த மனுக்களின் பிரதிவாதியாக டப்புலா டி லிவேரா சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரைவர் ரவூப் ஹக்கீம், தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவர் ரத்ன ஜீவன் ஹூல், சட்டத்தரணிகள், அமைப்புக்கள் அடங் கலாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டு மானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பாரா ளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கையை முன்வைத் துள்ளனர்.