சிறிலங்கா-புத்தளம் பாலாவி பிரதேசத்தில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான ஒருதொகை தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாலாவி நாகவில்லு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளர் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பாலாவி களப்பு பிரதேசத்தில் நேற்று (26) இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 4 கிலோ 485 கிராம் தங்கம் மற்றும் சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் கூறினர்.
குறித்த தங்கம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு தயாராக இருந்துள்ளதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள புத்தளம் தலைமைய பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

