ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹட்டன் பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் செனன் பகுதியில் நேற்று (26) எட்டு மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்ட போது கார் ஒன்றில் மிகவும் சூட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதை பொருள் 2100 மில்லிகிராம் நிறையுடையது எனவும் சந்தேகநபர் பிபில மொனாராகலை, மத்திய மலைநாடு, அம்பாறை ஆகிய பிரதேசங்களுக்கு ஈசி கேஸ் முறையில் போதை பொருள் விநியோகிப்பவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மொனராகலை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் மற்றும் போதை பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

