மன்னார் நகரசபையின் 31 அமர்வில் உறுப்பினர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது

254 0

மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை அகற்றுவது தொடர்பான தீர்மானம் மன்னார் நகர சபையினால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகாரணமாக மன்னார் நகரசபையின் 31 அமர்வில் உறுப்பினர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

மன்னார் நகரசபையின் 31 ஆவது அமர்வு நேற்று (21) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது சபை உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தனர்.

குறிப்பாக கடந்த சபை அமர்வில் மன்னார் பகுதியில் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் மேலதிகமாக குறித்த வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கழிவு நீர் வடிகன்களுக்கு மேற்பகுதியிலும் கட்டுமானப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

எனவே குறித்த நடவடிக்கைகளுக்கு உடனடியாக நகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த கட்டுமான பணிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் குறித்த தீர்மான ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் நகரசபை தவிசாளர் மற்றும் நகரசபை செயலாளர் குறித்த தீர்மனத்தை நிறைவேற்றுவதில் பின் நின்றதாகவும் உறுப்பினர்கள் சிலர் சபை அமர்வின் போது குற்றம் சுமத்தியிருந்தனர்.

நகரசபை தவிசாளர் ஒப்பமிட்டு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட கடிதத்தில் குறித்த கட்டிடங்களை உடைப்பதற்காக நகரசபை உறுப்பினர்களை அழைத்திருந்த போதிலும் நகரசபை தவிசாளரும் செயலாளரும் ஏன் அப்பகுதிக்கு வரவில்லை எனவும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் 07 நாள் அவகாசத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாவில்லை என்றால் கடைகளை மூட வேண்டும் என தீர்மான மேற்கொள்ளப்பட போது ஏன் அந்த தீர்மானம் நடை முறைப்படுத்தபடாமல் கடைகளை உடைக்க வேண்டும் என தீர்மானம் மாற்றி அமைக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நகர சபையின் தலைவர் தான் அங்கு சமூகம் அளிக்க வேண்டியதில்லை எனவும் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்து விட்டு பார்வையிட்டு உறுப்பினர் ஒருவரை பொறுப்பாக நிறுத்தி விட்டு தான் சென்றதாக தெரிவிக்க இது ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் இல்லை என உறுப்பினர்கள் தெரிவிக்க சபையில் அமைதியின் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து வாத பிரதி வாதங்கள் உச்ச நிலையை அடைய சபை தீர்மாங்களை தூக்கி எறியுங்கள் எனவும் சபை உறுப்பினர்கள் இங்கே துள்ளக்கூடாதும் என நகரசபை தவிசாளர் கொந்தளிக்க நகரசபை அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டது.

நீண்ட நேரம் அமைதியின்மைக்கு பிறகு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிறகு எங்கு இருந்து கடைகளை அகற்ற ஆரம்பிப்பது என உறுப்பினர்களுடையே தர்கம் ஏற்பட்டது.

பின்னர் முன் பக்கமாக அகற்றுவதா? பின்பக்கமாக அகற்றுவதா? என ஒரு கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு புதிய கடைகளை வழங்குவதில் நகரசபை உத்தியோகஸ்தர் சிலர் கையூட்டு பெறுவதாகவும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர்.

அவ்வாறு சில ஊழியர்கள் தொடர்சியாக செயற்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லது விடத்து இடம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியில் பல்வேறுவிதமான விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு சபை அமர்வு 4 மணியளவில் நிறைவடைந்தது.