இன்று மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி பதவிப்பிரமாணம்

439 0

z_pi-‘Nothing-to-fear-iமத்திய வங்கியின் புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி இவருக்கான நியமனத்தை கையளிக்கவுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில், புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதியால் கடந்த 2ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இந்திரஜித் குமாரசுவாமி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியுடன் முதல் சந்திப்பை நடத்திய அவர் இரண்டாவது சந்திப்பாக பிரதமரை அலரி மாளிகையில் வைத்து சந்தித்துள்ளார்.

இதன்போது மத்திய வங்கியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது..இதனிடையே, பொதுநிறுவனங்களுக்கான நாடாளுமன்ற குழுவான கோப் குழு எதிர்வரும் வியாழக்கிழமையன்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்திக்கவுள்ளது.

கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார். மத்தி வங்கியின் மீது சுமத்தப்பட்டுள்ள திறைசேரி முறிகள் கொள்வனவு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவசியம் ஏற்படின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனும், குழுவின் முன் பிரசன்னமாகுமாறு அழைக்கப்படுவார் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Leave a comment