பிரதேசசபை தவிசாளர் உட்பட 8 பேர் கைது!

16 0
சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த லக்கல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்கல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி நேற்று (15) அதிகாலை 2.30 மணியளவில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

லக்கல பிரதேச சபையின் தலைவர் புத்திக சேனாரத்ன உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து 24 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச சபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கும் மற்றும் வழக்கு தாக்கல் செய்யாமல் விடுவிப்பதற்கும் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரதேச சபை தவிசாளருடன் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் இருந்து 221 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவரும் ´யகா´ என்று அழைக்கப்படும் சுரங்க திஸாநாயக்க என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.