சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஹெரோயினுடன் 178 பேர் கைது

15 0
சிறிலங்காவில் நேற்று (15)பிற்பகல் 6 மணி முதல் இன்று (16) காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 429 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 178 பேரும் மற்றும் கஞ்சா வைத்திருந்த 102 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான ´ரெயில்பாரே சுமீர´ என்று அழைக்கப்படும் சுமீர மதுசங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹேரோயின் போதைப்பொருளுடன் மாளிகாவத்தை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாதாள உலக குழு உறுப்பினர் ஆர்மி சம்பத்தின் நெருங்கிய நண்பர் என தெரிவிக்கப்படுகிறது.