கொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்

12 0

கொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக நினைத்திருந்தால் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். 17 வருடமாக தமிழகத்திற்கு துரோகம் இழைத்த கட்சி திமுக.

பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன். அறிக்கை மூலம் மட்டுமே பேசும் கமல்ஹாசன் அடுத்த பிக்பாஸ்க்கு தயாராகி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.