மட்டக்களப்பு புதுநகர் 6ம் குறுக்கு வீதியின் புனரமைப்பு பணி ஆரம்பம்!

208 0

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புதுநகர் 6ம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளின் ஊடாக 20ம் வட்டார உறுப்பினர் இரா.அசோக் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இவ் வீதியானது கொங்றிட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.

மாநகர சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 400 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபையின் உறுப்பினர் இரா.அசோக், மாநகர பொறியியலாளர் சித்திரதேவி லிங்கேஸ்வரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.