ரவுடிகளிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றக்கோரி 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பெட்டா பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘நான் திருமணம் செய்ய மறுத்ததால் சங்கர் என்பவர் தலைமையிலான ரவுடிகள் எனது தந்தை, தாயை துன்புறுத்தி மிரட்டுகிறார்கள். அவர்களது தூண்டுதலின்பேரில், கார்கில் போரில் பணியாற்றிய எனது தந்தை மீது போலீசார் பொய்வழக்குகளை பதிவு செய்துள்ளனர். எனவே ரவுடிகளிடம் இருந்து எனது குடும்பத்தை காப்பாற்ற உதவ வேண்டும், தந்தை மீது பொய் வழக்குகள் பதிவு செய்த பெட்டா போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர், விதுரா நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி கமிஷனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

