நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பை விட நல்லிணக்கமே முக்கியம் பெற்றது

229 0

நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசியபாதுகாப்பை விட நல்லிணக்கமே முக்கியத்துவம் பெற்றிருந்தது என தெரிவித்துள்ள தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் சிசிரமென்டிஸ் இது தவறான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கமே முன்னுரிமை பெற்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச அளவில் அவ்வேளை பல நெருக்கடிகளை சந்தித்தன் காரணமாக அவர்கள் நாட்டை பற்றிய தோற்றத்துக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த முயன்றனர் என சிசிரமென்டிஸ் தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டவர்கள் நல்லிணக்கம் குறித்து பேசுவதற்காக இலங்கை வந்தனர் என தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு செயலாளர்கள் அவர்களுடன் அமர்ந்து நீண்டநேரம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது என தெரிவித்துள்ளார்.

சிலவேளைகளில் அவர்கள் வாராந்த புலனாய்வு குழுவின் கூட்டத்தில்பேசப்பட்ட விடயங்கள் பற்றி பேசுகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் படையினர் வசமிருந்த நிலங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் முயன்றனது இது இலகுவான விடயமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

நிலங்களை விடுவிப்பதில் நாங்கள்அதிகநேரத்தை செலவிடவேண்டியிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.