சிறிலங்கா சுங்க சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தவறு தொடர்பில் சட்டத்தினால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டப்பணத்திற்கு மேலதிகமாக அறவிட்ட 3,650,000 ரூபா பணத்தை மீள செலுத்துமாறு சுங்க ஆணையாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாவலபிட்டிய பகுதியை சேர்ந்த மேரி பெருமாள் உட்பட மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்களால் நடத்திச் செல்லப்பட்ட மதுபானசாலையை சுற்றிவளைத்த சுங்க அதிகாரிகள் அதற்காக 50 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து அதில் 40 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக பெற்றுக் கொண்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுங்க சட்டத்தின் அடிப்படையில் தவறு தொடர்பில் அறவிட கூடிய அதிகூடிய தண்டப்பணம் 5 இலட்சம் ரூபா என குறிப்பிட்ட மனுதாரர்கள், அது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

