கொழும்பில் மீண்டும் பேருந்து முன்னுரிமை திட்டம் அமுல்!

290 0

கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள  நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும்  வகையில்,  பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டத்தை (BUS LANE)  மீள நடைமுறைப்படுத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள  நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும்  வகையில்  பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டம் பகுதி பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் முதல் கட்டமாக பொரளை, புஞ்சி பொரளை மருதானை, ரெக்னிகல் சந்தி மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் பஸ் முந்துரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய, காலை 6 மணி முதல் 9 மணிவரையிலான காலப்பகுதியிலே இவ்வாறு பேருந்து முன்னுரிமை   அமுல்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமுல்படுத்தும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  எதிர்வரும் 14ஆம் திகதி முதல்  பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டத்தை    மீள அமுல்படுத்துவதற்கு   போக்குவரத்து பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.