சுயாதீன ஆணைக்குழுக்கள் குறித்து நீதியமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார கண்டனம் வெளியிட்டுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் அவசியமில்லை,சில ஆணையாளர்களின் நடவடிக்கைகளினால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஒருவரின் இந்த கருத்தினை சுயாதீன ஆணைக்குழுக்களையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பலவீனப்படுத்தும் முயற்சியாகவே கருதவேண்டும் என நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் நீதித்துறை பதவிகளுக்கும் தனது விசுவாசிகளை நியமிக்க அரசாங்கம் முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக ஒழுக்கமற்ற சமூகம் உருவாகும் சுதந்திரம் பறிபோகும என அவர் தெரிவித்துள்ளார்.

