கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

326 0

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய பேரூந்து நிலையத்தில் 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக திரிகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

திருகோணமலை கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியதகவலையடுத்து பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் இருந்து திருகோணமலைக்கு வந்தடைந்த பேரூந்தில் பயணம் செய்த பெண் தான் அங்கிருந்த ஐந்து உள்ஆடைக்குள் மறைத்திருந்திருந்த நிலையில் கேரளா கஞ்சாவை கைப்பற்றப்பட்ட முடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவை பெற்றுக்கொள்ள திருகோணமலை, இரக்கக்கண்டி, ஐந்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த 29, 20 வயதுடைய இருவரையும் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமையக பொலிஸார் வசம் ஒப்படைத்ததாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.