சிறிலங்காவில் வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

285 0

சிறிலங்காவில் வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை  இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த மாதம் இறுதிவரை குறித்த  நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளை விரிவாக முன்னெடுக்குமாறு கிராம அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதேவேளை சிறிலங்காவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.