30 கிலோ கேரள கஞ்சாவை கடத்திய 4 பேர் கைது

284 0

நீர்க்கொழும்பு பகுதியில் கேரள கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, ஒரு மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 30 கிலோ கிராம் கேரள கஞ்சா அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கேரள கஞ்சா தொகை யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.