தேங்காய்களினுள் மறைத்து ஹெரோயினை எடுத்துச் சென்ற ஐவர் கைது

279 0

தெற்கு அதிவேக நெடுச்சாலையின் பின்னதுவ வௌியேற்றத்தில் வைத்து ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரகஹஹேன பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேங்காய்களினுள் மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.