13வது திருத்தம் எம்மீது திணிக்கப்பட்டது -சரத்வீரசேகர

286 0

மாகாணசபைமுறையை நான் தற்போதும் எதிர்ப்பதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே மாகாணசபை முறையை நான் எதிர்த்து வந்துள்ளேன் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னரும் எனது எதிர்ப்பு மாறாவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைமுறை தொடரவேண்டுமா என்பதை தீர்மானிப்பதே எனது முக்கிய பணி என அவர் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் எம்மீது திணிக்கப்பட்டது,என தெரிவித்துள்ள சரத்வீரசேகர அதன் ஊடாகவே மாகாணசபைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டை சமஸ்டிமுறைக்கு மாற்றுவதே இதன் நோக்கம் எனினும் மாகாண ஆளுநர்கள் காரணமாக நாடு பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆபத்து இன்னமும் உள்ளது,நாங்கள் அதனை அகற்றவேண்டும்,எனவும் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாகாணமுதல்வராக பணியாற்றியவேளை சிவி விக்னேஸ்வரன் வடமாகாணத்திலிருந்து புத்தரின் சிலைகளை அகற்றவேண்டும் என கோரி பேரணிகளில் ஈடுபட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண முதல்வர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் மாகாணங்கள் சுயாட்சியை அறிவிப்பதற்கான வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.