13 ஆவது திருத்தத்தை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்களுக்கு உரித்தான காணிகள் சுவீகரிக்கப்பட்டால் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க தான் தயாராக உள்ளதாகவும் அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

