தனிநாயகம் அடிகளாரின் நினைவுநாள் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

316 0

தமிழுக்கும், சைவத்திற்கும் அரும்பணியாற்றிய தனிநாயகம் அடிகளாரின் 40ஆவது ஆண்டு நினைவுநாள் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில், வவுனியா மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் அமைந்துள்ள அடிகளாரின் உருவச் சிலைக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அடிகளார் தொடர்பான நினைவுப் பேருரையை தமிழருவி சிவகுமாரன் நிகழ்த்தினார்.

வவுனியா நகரசபையின் உப நகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராயா, சு.காண்டீபன், சுமந்திரன், தமிழ்விருட்சம் அமைப்பின் சந்திரகுமார் கண்ணன், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.